நுவரெலியாவில், 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் குடி நீர் திட்டம்!

மலையக மக்களின் குடி நீர் பிரச்சினையை கருத்திற்கொண்டு, அட்ரோ மற்றும் ஒக்ஸ்பாம் ஆகிய நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஐரோப்பிய நாட்டின் நிதி ஒதுக்கீட்டில், நுவரெலியா நோர்வூட் மேற்பிரிவு ஸ்டொக்கம், மானளி கவரவில ஆகிய தோட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு, குடி நீர் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

6 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், குடி நீர் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது.

இதன் போது, நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார, பிரதம அதிதியாக கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நிகழ்வில், அட்ரா மற்றும் ஓக்ஸ்பாம் நிறுவன முகாமையாளர்கள் மற்றும் நோர்வுட் தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!