திருமலையில், சர்வதேச முதியோர் தின நிகழ்வு!

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட, கிழக்கு மாகாண சர்வதேச முதியோர் தின விழா – 2019, இன்று கொண்டாடப்பட்டது.

பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண ஆளுனர் விஜயலால் டீ சில்வா மற்றும் சிறப்பு அதிதிகளாக, கிழக்கு மாகாண செயலாளர் சரத் அபய குணவர்த்தன மற்றும் ஆளுனரின் செயலாளர் அசங்க குனவர்த்தன மற்றும் திணைக்கள செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

முதியோர்களை மகிழ்விக்க கூடிய, ஆடல் பாடல்கள் களியாட்ட நிகழ்வுகள் என, கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவில் இருந்தும், முதியவர்கள் நிகழ்வுகளை அரங்கேற்றினர்.

இதன் போது உரையாற்றிய, கிழக்கு மாகாண ஆளுனர் விஜயலால் டீ சில்வா, தென் ஆசியாவை பொறுத்த வரையில், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில், முதியோர்களை பாரமாக எண்ணி வரும் நிலையை, நாம் அறிந்து கொள்ள முடிவதாகவும், இந்த நிலையை இலங்கையில் மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், பெரியோர்களை மதிக்கவும், 2025ம் ஆண்டில், எமது நாட்டின் சனத்தொகையில் 29 வீதம் முதியோர்களாக இருப்பார்கள் எனவும், அவர்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளதாகவும், அதற்கான ஓர் முன்னெடுப்பாகவே இந்த நிகழ்வை கருதுகின்றேன் எனவும், கிழக்கு மாகாண ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், விசேட தேவை உடையோருக்கு சக்கரநாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!