அதிகாரப்பரவல் இணக்கப்பாட்டையே த.தே.கூ மேற்கொண்டுள்ளது – பி.ஹரிசன்!

ஜனநாயக ரீதியிலான ஒரேயொரு இணக்கப்பாடே, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக, மீன்பிடி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று இரவு விஜயம் செய்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மீன்பிடித்துறை அமைச்சருமான பி.ஹரிசன், அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பி.ஹரிசன், தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் செய்து கொண்ட ஜனநாயக ரீதியிலான இணக்கப்பாடு குறித்து தெளிவுபடுத்தினார்.

‘எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. அவர்கள் அனைவரும் ஆதரவை வெளியிட்டிருக்கின்றனர். வடக்கில் அனைத்து குழுவினரும் எம்முடன் இணைந்து விட்டனர்.

அதேபோல பெருந்தோட்டத்துறை பகுதிகளிலும், தொண்டமான், திகாம்பரம் உட்பட அனைத்துப் பிரதான கட்சிகளும் எம்முடன் இணைந்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய இணைந்திருக்கின்றனர்.

ஒரே நாட்டிற்குள் அதிகாரப்பரவலை செய்வதற்கு, ஐக்கிய இலங்கைக்குள் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஜனநாயக ரீதியிலான இணக்கப்பாடே உள்ளது.

இதேவேளை, இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்வதற்கு, கோட்டபாய ராஜபக்ச செய்த முயற்சிகள் குறித்து, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

‘மொட்டுக் கட்சியின் வேட்பாளருக்கு நாங்கள் பயப்படவில்லை. அந்த வேட்பாளர் கள்ளத்தோனி என்றே அறியப்படுகிறது.

எவ்வாறு அந்த வேட்பாளர் திருட்டுத்தனமாக தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை தயாரித்ததுடன், இன்னும் அமெரிக்காவிலிருந்து அவரது பிரஜாவுரிமை இரத்து செய்யப்படவும் இல்லை.

அதற்கு முன்னரே வாக்காளர் இடாப்பில் அவருடைய பெயர் உள்ளீர்க்கப்பட்டுள்ளதோடு, தேசிய அடையாள அட்டையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மீறப்பட்டே, இந்த அனைத்து விடயங்களும் செய்யப்பட்டுள்ளன என்று எமக்கு அறியக்கிடைத்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அப்போதும்கூட கோட்டபாய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜையாகவே இருந்துள்ளார்.

இப்படியிருக்க எவ்வாறு அவற்றைப் பெற்றிருக்கின்றார்? அதிகாரத்தைப் பயன்படுத்தி சூழ்ச்சிகளை செய்து சட்டங்களை மீறியே இவற்றை செய்திருக்கின்றார்.

கோட்டபாயவின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக, நாட்டின் மக்கள் இப்போதே தீர்மானித்து விட்டனர்.

அத்துடன், நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை தடுப்பதற்கு, மஹிந்தவாதிகள் முயற்சித்து வருவதாகவும், அமைச்சர் ஹரிசன் குற்றம் சுமத்தினார்.

‘இவர்களுடைய பழக்கவழக்கமாகவே இது இருந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தங்கங்களைக் கொண்டு வரும் போது அவற்றிலும் பலவற்றை கொள்ளையடித்தனர்.

மீட்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதனை கேட்கும் போது அதற்கெதிராக நடவடிக்கை எடுத்ததையும், போராட்டங்களையுமே மேற்கொண்டார்கள்.

அண்மையில் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவச் சிப்பாய்களை விற்பனை செய்யப்பார்த்தார்கள். எனினும் சஜித் பிரேமதாஸ அங்கு சென்று சந்தித்து வாக்குறுதி அளிக்கையில், மஹிந்த ராஜபக்ச வெறுமனே சென்று சந்தித்து வாக்குறுதிகூட அளிக்கவில்லை.

கடந்த கால வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின்னணியில் இவர்களே செயற்பட்டிருப்பது புலப்படுகின்றது.
பல்வேறு சூழ்ச்சிகளை செய்து சஜித் பிரேமதாஸவின் வெற்றியை தடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!