கிநொச்சியில், சர்வதேச கூட்டுறவாளர் தினக் கொண்டாட்டம்!

97ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினம், கிளிநொச்சி கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று கொண்டாடப்பட்டது.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டுறவு தின நிகழ்விற்கு,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசமும் அதன் அங்கத்துவ சங்கங்களும் இணைந்து அமைத்துள்ள கடல்சார் கண்காட்சியும் மாதிரி விற்பனை நிலையத்தினையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கூட்டுறவாளர் தினநிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,கூட்டுறவாளர் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்கள் மற்றும் அங்கத்துவ சங்கங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!