யாழில் கல்வி தரத்தை உயர்த்துவேன்: அநுரகுமார !  

யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வித்தரத்தை எதிர்வரும் அரசாங்கத்தில் உயர்த்துவதற்கு ஜே.வி.பி நடவடிக்கை எடுக்கும் என ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது,இதில் உரையாற்றும்போதே ஜே.வி.பியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமாகிய அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் செருப்புக்களை கழற்சி விட்டு, வாசிகசாலைகளுக்கு செல்லும் பழக்கம் கிராமமட்டத்தில் இன்றும் இருக்கின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம் பொது நூலகத்திலும் இதனை அவதானிக்க முடியும்.

இப்படி வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாழ்ப்பாண மாவட்டதிற்கு வரலாற்றில் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்?

1981 அபிவிருத்தி சபை தேர்தலின்போது, அவர்களுடை பலத்தை வெளிக்காட்டக் கூடாத துளி நிலம் கூட இந்த மண்ணில் இருக்கக் கூடாது என ஜக்கிய தேசியக் கட்சியினர் நினைத்தனர்.

காமினிகளால் யாழ்.நூலகம் எரித்தழிக்கப்பட்டது.

அப்படியான அழிவுகரமான விடயங்களை ஏற்படுத்தினார்கள்.

நாங்கள் நம்புகின்றோம் வடக்கு மக்களின் எதிர்காலம்,அதனை கட்டியெழுப்பும் பாதை கல்வியாகும்.

அதனால் எங்களுடைய ஆட்சியின் கீழ், பாரிய தலையிட்டை செய்யப்போவது உங்களுடைய குழந்தைகளின் கல்வி சம்பந்தமாகவே.

அது தான் உங்கள் அபிவிருத்திக்கான பாதை.ஆனால் இங்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது.
சரியான ஒரு பாடசாலை இல்லை, ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர்களுக்கு சரியான வசதிகள் இல்லை, கல்விக்கான முறைமை இங்கு ஒடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் சாதராண பரிட்சை எழுத முன்பு விலகி விடுகின்றனர்.இதனால் நாங்கள் ஒரு கல்வி கொள்கை திட்டத்தை உருவாக்கவுள்ளோம்.

உங்களுடைய குழந்தையை இரண்டு கிலோமீற்றருக்கு மேலாக, கல்விக்காக செல்லவேண்டிய தேவையை இல்லாது செய்யவுள்ளோம்.

அப்படியான பாடசாலைகளை நாங்கள் ஏற்படுத்தவுள்ளோம்.

இன்று கல்வி பாடசாலைகளுக்கு வெளியே பிரத்தியேக வகுப்புக்களிலேயே உள்ளது.

இதனால் மீளவும் கல்வியை பாடசாலைக்குள்ளாக கொண்டுவருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!