ரயில்வே தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

நாட்டில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த போராட்டம் 8ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் கடந்த 26ஆம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படும் வரை தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, சம்பள முரண்பாட்டை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று 24ஆவது நாளாகவும் தொடர்கிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!