நாட்டில் டெங்கின் தாக்கம் தீவிரம்

நாட்டில் டெங்குக் காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 ஆயிரத்து 607 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும், மழையுடனான வானிலையால் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் 3 நாட்களுக்கு டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!