அலரிமாளிகையில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வு 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, நவீன் திஸாநாயக்க, எம்.எச்.எ.ஹலீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தின் உறுப்பினர்களும், பிரதமர் அலுவலகத்தின் உறுப்பினர்களும் காந்தியின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகர் எச்.இ.தரஞ்சித் சிங் சந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு காந்தியின் உருவச்சிலையொன்றை நினைவுச் சின்னமாக வழங்கினார்.

இதேவேளை, காந்தியின் ஜனன தினத்தை முன்னிட்டு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சினால் ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்த ஞாபகார்த்த முத்திரையை அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம், பிரதமர், இந்திய உயரஸ்தானிகர் உட்பட நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!