வட மாகாண விளையாட்டு விழா    

வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்ட அணி, 34 தங்கப்பதக்கங்கள் உட்பட 126 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் கைப்பற்றப்பட்ட பதக்கங்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு அதிகாரி முகுந்தன் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகளும் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை, வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் பதக்கங்களைக் கைப்பற்றிய வீரர்களுக்கு, மாவட்ட செயலகத்தினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!