முல்லை,மாவட்ட செயலகத்தால் விவசாய அமைப்புகளுக்கு வாகனங்கள்   

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கான வாகனங்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் விவசாய அமைப்புகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு உதவும், வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, உடையார் கட்டு கூட்டுறவுச்சங்கம், ஒட்டுச்சுட்டான் ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கம், ஆகியவற்றிக்கு உழவு இயந்திரப்பெட்டி மற்றும் உழவு இயந்திரம் என்பனவும், முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்திற்கு பிக்கப் ரக வாகனமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்து சங்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!