வடமராட்சியில்,பொது மண்டபம் திறப்பு  

வடமராட்சி கிழக்கு கொடுக்கிளாய் ஆழியவளை சக்திவேல் விளையாட்டுக் கழகத்தின் பொது மண்டபம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

பொது மண்டப திறப்பு விழா நிகழ்வு கழக தலைவர் செ.பாலகோபி தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

ஆளியவளை கொடுக்கிளாயை சேர்ந்த மூத்த உறுப்பினரும் புலம்பெயர்ந்து வசிக்கும் ஆறுமுகம் நவநீதராசாவின் அன்பளிப்பில் அமைக்கப்பட்டுள்ள குறித்த மண்டபத்தை, கழகத்தின் மூத்த உறுப்பினர் ம.சௌந்தரராசா சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வருடாந்தம் நடாத்தப்படுகின்ற வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டி ஆரம்ப நிகழ்வு கழக தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

12 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான போட்டிகளே ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் ஆழியவளை கொடுக்கிளாய் கிராம மக்கள், வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கழகங்களின் வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!