கிளி, பளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!   

கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கிளிநொச்சி – பளை அத்திரான் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாளையடியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 12 லட்சம் ரூபா பெறுமதியான 6 கிலோ 600 கிராம் கேரளா கஞ்சாவும், சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!