புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளரின் செயற்பாட்டிற்கு உறுப்பினர்கள் மன்னிப்பு

முல்லைத்தீவு முறிகண்டியில், காணொளிப் பதிவொன்றினை மேற்கொண்ட நபரை, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் தாக்கியமை தவறான செயற்பாடு என பிரதேச சபை உறுப்பினர்கள், குறித்த நபரின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

கடந்த வாரம் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளரினால், பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளிக்காட்சி ஒன்று வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிறேமகாந் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், குறித்த பொதுமகனின் குடும்பத்தினரை சந்தித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், காணொளிப்பதிவு செய்தமைக்காக தவிசாளர் தாக்குதல் நடாத்தியமைக்கு வருத்தம் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அப்பிரதேச பொது அமைப்புக்களுடனும், சந்திப்புக்களை நடாத்திய புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் ஆலோசிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!