கிளிநொச்சியில் மகாத்மா காந்தியின் ஜெயந்தி தின நிகழ்வு

அகில இலங்கை காந்தி சேவா சங்கமும், கிளிநொச்சி காந்தி சிறுவர் இல்லமும் இணைந்து, மகாத்மா காந்தியின் ஜெயந்தி தின நிகழ்வை நடத்தியுள்ளன.

இந்நிகழ்வு, கிளிநொச்சி உருத்திரபுரத்தில் உள்ள காந்தி சிறுவர் இல்ல வளாகத்தில், காந்தி சேவா சங்க தலைவர் சோ.க.தம்பிப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வு ஆரம்பமானதை தொடர்ந்து, காந்தி கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைத்தூதுவர் ஆர்.பக்ரா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், மதுரை காந்தி மியூசியத்தை சேர்ந்த மு.சீ.தேவதாஸ் காந்தி, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சு.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, காந்தீயம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், காந்தி ஜெயந்தி தின போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மதுரை காந்தி மியூசியத்திலிருந்து வருகை தந்து, காந்தியின் அகிம்சையை போதிக்கும் மு.சீ.தேவதாஸ் காந்தி கௌரவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!