2ஆம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் வெடித்ததில் 7 பேர் பலி

அமெரிக்காவில் 2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்ததில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

போயிங் பி-17 ரக விமானம் ஹார்ட்போர்டு விமான நிலையத்தில் இருந்து  13 பேருடன் புறப்பட்டு சென்றுள்ளது இந்த நிலையில், விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென தரையிறங்க முயற்சித்துள்ளது இதன் போது பிராட்லி சர்வதேச விமானத்தில் இருந்த பராமரிப்பு மையம் ஒன்றில் மோதியுள்ளது

விபத்து ஏற்படும்போது குறித்த விமானத்தில் 3 விமானிகள் மற்றும் 10 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர் லேமண்ட் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்

இந்த விமானம் 2ம் உலக போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசும் பணியில் செயல்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!