அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக செயலமர்வு

அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கான செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஜனதாக்சன நிறுவன நிதி அனுசரணையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது .

இதன்பொது மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கு அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக செயலமர்வாக நடைபெற்றது

மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ்    தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக என் எ .நிரோசன் ,மற்றும் எஸ் பந்துல ஆகியோர் கலந்துகொண்டனர்

செயலமர்வில் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் , சிறிய நடுத்தர தொழில்  முயற்சியாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் , அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ,, மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். bB

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!