அம்பாறையில், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விசேட செயலமர்வு!

அம்பாறை பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவுகளில், உலக வங்கியின் நிதி உதவியின் ஊடாக, காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வேலைத்திட்டம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு தொளிவூட்டும் செயலமர்வு, பொத்துவில் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இவ் தெளிவூட்டல் நிகழ்வானது, பொத்துவில் பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ் தலைமையில் நடைபெற்றதுடன், மாகாண விவசாயப் பணிப்பாளர் டாக்டர் ஆரியதாச கலந்துகொண்டார்.

நிகழ்வில், இலங்கையில் காலநிலை ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கை என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் வாழும் விவசாய சமூகங்கள் அல்லது குடும்பங்களின் தாங்கு திறனை முன்னேற்றி விவசாயிகளின் நீர்ப்பாசன விவசாய வினைத்திரனை மேம்படுத்தும் வகையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், விவசாய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்காக உலக வங்கி சுமார் 42 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியுள்ளன.

இந்நிகழ்வில், பிரதேச, மாவட்ட மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொத்துவில், கோமாரி கமநலசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்தகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!