யாழ், உடுவில் மகளீர் கல்லூரியின், 195 ஆவது ஆண்டு நிறைவு!

யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரியின், 195 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளால், துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் பற்றீசியா கனித்தா ஜெபரட்ணம், துவிச்சக்கரவண்டி பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமான துவிச்சக்கரவண்டி பயணம், காங்கேசன்துறை வீதி ஊடக, தொல்லிப்பழை யூனியன் கல்லூரியை சென்றடைந்து, அதன் பின்னர் உடுவில் மகளீர் கல்லூரியை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து, 195 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிபர் தலைமையில், பாடசாலை வளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது.

நிகழ்வில், தொல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!