நுவரெலியா பொகவந்தலாவயில் வெள்ள நீரில் அடித்து செல்லபட்ட குடும்பஸ்தர் சடலமாக  மீட்பு   

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியில், வெள்ள நீரில் அடித்து செல்லபட்டதாக கூறப்பட்ட குடும்பஸ்தர் பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 11.30 மணியளவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயாவில் தெரேசியா பகுதியில் தோண்பட்டிருந்த பாரிய மாணிக்ககல் குழி ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 30ம் திகதி பெய்த கடும் மழையின் போது கிலானி தோட்டப்பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரத்திற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது, கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக குறித்த நபர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரை தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் பொகவந்தலாவ தெரேசியா, கிலானி மோரா ஆகிய தோட்டபகுதி மக்கள் கடந்த இரண்டு தினங்களாக ஈடுபட்டனர்.

இதேவேளை காணாமல் போன நபரை தேடும் பணிக்காக பொகவந்தலாவ பொலிஸாரின் ஊடாக, கொழும்பு துறைமுகத்தில் உள்ள கடற்படையினர் வரவழைக்கபட்டு இரண்டு நாள் தேடும் பணிகள் முன்னெடுக்கபட்டநிலையில், காணாமல் போனவர் இன்றைய தினம் கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!