அம்பாறை, மருதமுனையில், சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் பேரணி   

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மருதமுனை கியூமன்லிங் மாற்றுத்திறனாளிகளின் பாடசாலை மாணவர்களது பேரணி நேற்று நடைபெற்றது.

அதிபர் ஏ.கமருதீன் தலைமையில் நடைபெற்ற குறித்த பேரணி, மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி பிரதான வீதியிலிருந்து, பிரதான வீதி ஊடாக கியூமன்லிங் மாற்று திறனாளிகள் பாடசாலை வரை பேரணியாக சென்றது.

இதன்போது ‘நாளைய உலகம் உங்கள் கையில், நாட்டை நேசிப்பது போல் உங்களை நேசியுங்கள், சிறார்கள் விலைமதிப்பற்ற சாதனை செல்வங்கள், உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாகச் சென்றனர்.

பேரணியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!