யாழ் இருபாலையில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு   

யாழ்ப்பாணம் இருபாலை கிராம அபிவிருத்தி சங்கத்தினால் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு, நிகழ்வுகள் நேற்று நடாத்தப்பட்டன.

இருபாலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமையில் கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்.மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பதிகாரி இரட்ணசிங்கம் அமலன் பிரதம அதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயதரன், சமுர்த்தி உத்தியோகத்தர் என்.உமாகாந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக கிராம உத்தியோகத்தர் திருச்செல்வம் ஜேசுதாஸ், நல்லூர் லயன்ஸ் கழக தலைவர் சின்னத்துரை இலட்சுமிகாந்தன், மக்கள் ஆதரவு மையத்தின் பணிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன், உதயம் கலாசர சங்கத்தின் இணைப்பாளர் தியாகராஜா நிசங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கிராம நன்மைக்காக உழைத்த முதியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!