மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் சிறுவர் தின நிகழ்வுகள்   

மலையகத்தில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நேற்று நடாத்தப்பட்டன.

பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கீழ் பிரிவு கிரேன்லி தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு பாசாலையின் அதிபர் குழந்தைவேல் பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள் மகிழும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிறுவர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி விழிப்பு ஊர்வலமும் நடாத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், சுமார் 500 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கடந்த ஜூலை 18ம் திகதி டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருந்த நிலையில், குறித்த மாணவிகளை அனைத்து மாணவர்களும் நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின தொனிப்பொருளான
‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியை பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள், பாடசாலையின் அதிபர் எம்.மூவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள் மகிழும் வகையில் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!