முதியோர் தின நிகழ்வுகள் கைதடியில்

யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில், முதியோர் தின நிகழ்வுகள், வாரந்த நிகழ்வுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த முதியோர் வார நிகழ்வுகள் ‘வயதுச் சமத்துவத்திற்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சமூக அமைப்புக்களின் ஒன்றிணைவுடனும், சமூக சேவைகள் திணைக்கள அனுசரணையுடனும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்ற இவ்விழாவில் கண்காட்சி மற்றும் விற்பனைக் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கைதடி முதியோர் இல்ல திறந்தவெளி அரங்கில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட முதியோர் வார நிகழ்வும், கண்காட்சி மற்றும் விற்பனைக்கூடமும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்;ந்து இடம்பெறவுள்ளது.

முதியோர் இல்ல அத்தியட்சகர் எஸ்.செல்வம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நேற்றைய நிகழ்வில் முதியோர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் மாகாண சமூக சேவைகைள் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!