யாழில் பாம்புக் கடிக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், பாம்பு தீண்டிய நிலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உடுவில் ஆலடி வீதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என தெரியவருகின்றது.

அத்தோடு, உயிரிழந்த இளம் தாய்க்கு ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி, வீட்டு முற்றத்தில், இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த கணவனுக்கு, உணவினை பரிமாறிக்கொண்டிருக்கும் சமயம்
குறித்த இளம் குடும்பப் பெண்ணை புடையன்பாம்பு தீண்டியுள்ளது.

இதனை அவதானித்த கணவன் மனைவிக்கு முதலுதவி வழங்கியதோடு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு குறித்த குடும்பப் பெண் மாற்றப்பட்டு,

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளம்குடும்பத்தலைவி உயிரிழந்தமை தொடர்பான இறப்பு விசாரணையினை, வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார்

மேற்கொண்டார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!