பலாலி விமானநிலையத்திற்கு,வடக்கு ஆளுநர் விஜயம்!     

யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

பலாலி விமான நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அதன் அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை தொடர்புபட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கமைய நேற்றையதினம் பலாலி விமான நிலையத்திற்குச் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!