அம்பாறை, பொத்துவில் – ஊறணி நில மீட்பு போராட்டத்திற்கு தீர்வு!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரணி 60ஆம் கட்டை காணி கோரிக்கையாளர்கள், கடந்த வருடம் ஆரம்பித்த நில மீட்பு போராட்டத்திற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், அவர்களது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவின் ஆலோசனைகளுக்கு அமைய, பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் முயற்சியின் பயனாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் நேரடி கண்காணிப்பின் ஊடாக பொத்துவில் பிரதேச செயலக காணிப் பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஊறணி 60ஆம் கட்டை காணி கோரிக்கையாளர்களின் ஆவணங்கள் ஊரணி, குண்டுமடு கிராமங்களில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

காணி உரிமம் தொடர்பான ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதுடன், சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காணி கோரிக்கையாளர்கள், தமது பக்க நியாய ஆதாரங்களை பிரதேச செயலாளரிடம் முன்வைத்திருந்தனர்.

இதேவேளை ‘எமது காணியை எமக்கு தாருங்கள், எமது இந்த நிலமீட்பு போராட்டத்திற்கு நல்லதொரு தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.’ என்ற கோரிக்கையை முன் வைத்து, கடந்த வருடம் ஓகஸ்ட் 14ஆம் திகதி முதல், பொத்துவில் ஊறணி 60ஆம் கட்டை கனகர் கிராம மக்கள், வீதியோரம் தற்காலிக கொட்டகை அமைத்து ஆரம்பித்த நில மீட்பு போராட்டம், இன்றுடன் 414 நாட்களை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!