சஜித்தை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், ஜக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை நிபந்தனைகளற்று ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

இன்று காலை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, குறித்த முடிவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்து வருகின்றன.

நேற்று அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தமது ஆதரவை நேற்றைய தினம் சஜித் பிரேமதாசவிற்குத் தெரிவித்திருந்த நிலையில், இன்று முஸ்லிம் காஸ்கிரஸ் கட்சி, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!