அம்பாறையில் சிறுவர் உரிமைக்காக கறுப்புப்பட்டியணிந்து ஆர்ப்பாட்ட பேரணி

சிறுவர் உரிமையை பாதுகாக்க கோரி, அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சிறுவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் கறுப்புபட்டி அணிந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை நடாத்தியுள்ளனர்.

சர்வதேச சிறுவர் தினமான நேற்று, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், சிறுவர் உரிமையை பாதுகாக்க கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி தேவசகாயம் ரஞ்சனி தலைமையில் நடைபெற்ற பேரணியானது, தம்பிலுவில் பொது சந்தைக் கட்டட வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுர சந்தி வரைச் சென்று அங்கு இலங்கை அரசு மற்றும் சர்வதேசத்திடம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க கோரி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், இலங்கை அரசு மற்றும் சர்வதேச அரசுகளிடம் தமது பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாக்குமாறும், காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக நீதிகோரியும் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் எனும் சிறு நூல் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபனால் வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டப் பேரணியில் திருக்கோவில், விநாயகபுரம், தங்கவேலாயுதபுரம், நேருபுரம், தம்பிலுவில் உட்பட திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து பெற்றோர்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!