யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வளுப்படுத்துவதற்கான கூட்டுறவுச் சங்கங்கள் எனும் தலைப்பின் கீழ் பெண்கள் மற்றும் யுவதிகளின் கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் வி எபெக்ட் நிறுவன நிதி அனுசரணையில் கீழ் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியை வலுப்படுத்தும் வகையில் பெண்கள் மற்றும் யுவதிகளின் கூட்டுறவு திட்டத்தின் கீழ் காப்புறுதி செயல்பாடு தொடர்பான செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் , வவுணதீவு , செங்கலடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் மற்றும் அனுராதபுரம் ,கெகிராவ பிரதேச கூட்டுறவுச் சங்க பெண்களுக்குமான செயலமர்வு மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது
மட்டக்களப்பு . காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி வை .அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வி எபெக்ட் நிறுவன தேசிய நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் டி .மயூரன் ., நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் பிரியந்த ஜெயகொடி, வளவாளராக உபாலி ஏறத் மற்றும் கிரான் , வவுணதீவு , செங்கலடி ஆகிய பிரதேச செயலக பிரிவு மற்றும் அனுராதபுரம் ,கெகிராவ பிரதேச கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள்
Batticalao