யாழ், வடமராட்சி பகுதியில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதி ஊடாக, முச்சக்கரவண்டியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, 6 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், 25, 26 வயதுடையவர்கள் என்றும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கஞ்சா போதைப்பொருள், முச்சக்கரவண்டி ஆகிய சான்றுப் பொருட்களுடன், சந்தேக நபர்கள் இருவரும், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.சேனாதிரவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவு, இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!