சுஹத கம்லத்தை பதவி நீக்க நடவடிக்கை : அத்துகோரள!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு, அமைச்சர்கள் சிலர் அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, சாட்சியங்களைப் பாதுகாக்கும் அதிகார சபையின் தலைவரான முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரல் சுஹத கம்லத்தை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

சுஹத கம்லத் என்கிற நபரது தனிப்பட்ட அரசியல் நோக்கம் பற்றி எனக்குப் பிரச்சினை கிடையாது. எனினும் அவர், நீதியமைச்சில் உள்ள குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் அதிகார சபையின் தலைவராக கடமையாற்றுகின்றார்.

அவரை அப்பதவிக்கு, முன்னாள் நீதியமைச்சரான விஜேதாஸ ராஜபக்ச வழங்கியிருப்பதோடு அந்தப் பதவியிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக, ஏனென்றால் அரச அதிகாரி ஒருவர், விசேடமாக அரச நிர்வாகத்தில் இருப்பவர் சாட்சிகளை பாதுகாப்பதற்கான அதிகார சபைத் தலைவருக்கு, தனது அரசியல் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதனை ஊடகங்களுக்கு முன்பாக வெளியிட முடியாது.

இதுகுறித்து நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன்வைத்தேன். அவர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று ஜனாதிபதி செயலாளருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்.

இன்று அல்லது நாளை அவர் பதவிவிலகாவிட்டால், ஜனாதிபதி செயலாளரினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!