ஐ.தே.காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் உடன்படவில்லை : தயாசிறி

ஐக்கிய தேசிய கட்சியுடன், சுதந்திர கட்சிக்கு எவ்வித தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த அழைப்பிற்கு, இதுவரை பதிலளிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியுடன், சுதந்திர கட்சிக்கு எவ்வித தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை.

கொள்கை ரீதியான பிரச்சினைகள் மட்டுமே இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது, ஈ.பி.டி.பி. மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கும்.

‘டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினரும், தொண்டமானின் கட்சியினரும், சுதந்திரக் கட்சியுடன்தான் இணையவுள்ளார்கள். சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கே அவர்கள் ஆதரவளிப்பார்கள்.

தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் தொடர்பாக நாம் விமர்சிக்க முடியாது. எமக்கு கட்சியின் நிலைப்பாடு தான் அவசியமாக இருக்கிறது. அதேபோல், நாமும் தனிப்பட்ட முடிவுகளை இந்த விடயத்தில் எடுக்க முடியாது.

கட்சியின் மத்தியக் குழுவும், உயர் மட்டக்குழுவும் எடுக்கும் முடிவுகளுக்கு, நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!