சிங்கள மக்கள் மத்தியில், தீர்வுத் திட்டத்தை கொண்டு செல்லும் நபர் யார்? – சிறிதரன்!

தமிழ் மக்களையும் அரவணைத்துச் செல்வோம்; என்ற நம்பிக்கையை வழங்குகின்ற, ஜனாதிபதி வேட்பாளருக்கு, ஆதரவு வழங்குவது தொடர்பில் சிந்திக்க தயார் என, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று, கிளிநொச்சி விவேகானந்தா நகரில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது வாக்குகள் மிகவும் பெறுமதியானது. முதியோர்கள் இன்றைய தினத்தில் கௌரவிக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் பெற்றோர்களை வளர்க்கின்ற மனநிலை வளரவேண்டும்.முதியோர் இல்லங்கள் இல்லாதிருக்க வேண்டும்.

இந்த நாட்டில் அடிக்கடி எதோவொரு தேர்தல் நடைபெறும் கடந்த இரு ஆண்டுகளைத்தவிர்த்து இ;பபோது ஜனாதிபதித்தேர்தல் வந்திருக்கின்றது, நாங்கள் இப்போது ஒரு சரியான ஒரு தீர்வை அடையமுடியாமல் எங்களுக்கான சரியான பாதை அமைக்கப்படாத நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அது பற்றி ஆலோசித்து வருகின்றது.

எமது கட்சியின் தலைவர், அறிவித்தது போன்று ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத்தீர்த்து வைப்பதில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாசைகளை பூரத்திசெய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான தீர்வுத்திட்டம் என்ன?

கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிக்;கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர் பிரச்சனையில் எந்த வேட்பாளர் ஒரு தீர்க்கமான முடிவை வைக்கின்றாரோ, எவர் ஆணித்தனமான கருத்தை முன்வைக்கின்றாரோ அவர் தொடர்பில் நாங்;கள் சரியான முடிவை எடுப்;போம்.

950 நாட்களுக்கு மேலாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் வீதியில் போராடுகின்றார்கள், அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்;படவில்லை, இன்;னும் எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை, இந்த விடயங்களை மையமாக வைத்து இதற்கான தீர்வு என்ன என்பதனை எங்கள் மக்களுக்;காக யார் தன்;னுடைய கருத்;தை பகிரங்கமாக முன்வைக்கக்கூடிய துனிச்சல் மிக்க ஜனாதிபதி வேட்பாளர்.

தமிழ் மக்களிற்கு ஒரு கதையினையும், சிங்கள மக்களிடதில் சென்று வேறு விதமான கதையும் கூறுபவர்களிற்கு ஆதரவு இல்லை. இரு இனத்தவரையும் இணைத்து செல்லக்கூடிய, தைரியமாக வெளிப்படைத்தன்மையுடையவரிற்கே ஆதரவு என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!