சஜித்திற்கே ஆதரவு – தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர் பீட குழுக்கூட்டம், கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில், இன்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர்களான அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், வேலுகுமார், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, குருசாமி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா ஜாப்டர், பிரதிப் பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களான ஏ.லோரன்ஸ், அனுஷா சந்திரசேகரன், பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது, பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. (சி)சிஜத்திற்கே ஆதரவு – தமிழ் முற்போக்கு கூட்டணி

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!