மட்டு, தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு!

மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியில் நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், மாகாண மட்டத்தில் சாதனைப்படைத்து மாகாணத்திற்கு, மாவட்டத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்த, மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.பற்றிக் தலைமையில், இன்று கல்லூரியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் உதைப்பந்தாட்டம், கூடைப்பந்து, கபடி, ஆங்கில நாடகம் ஆகியவற்றில் வெற்றி பெற்று மாகான மட்டத்தில் முதல் இடத்தினை பெற்று சாதனை படைத்ததுடன், தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவான கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கல்லூரி மாணவர்களின் சிறுவர் தின ஊர்வலமும் தொடர்ந்து அதிதிகள் வரவேற்புடன், தேசிய கல்லூரி கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய, கல்லூரி கீதங்கள் இசைத்தளுடன் நிகழ்வுகள் ஆரம்பம்மானதுடன், சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயக் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!