தேர்தலில் என்ன நடக்கும் என மஹிந்தவுக்கு தெரியும் : மரிக்கார்!

கோட்டபய வெற்றிபெற மாட்டார் என மஹிந்தவிற்கு தெரியும் அதனால் தான், பிரதமர் பதவி உங்களுக்கா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும் போது அவர் பார்ப்போம் என கூறினார், என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு காலங்களில் நாம் பார்த்தோம், சிகிரியா உயரத்திற்கு பதாதைகளை அடிக்கப்பட்டது, ஆனால் என்ன நடந்தது ? அதேபோன்றுதான் இம்முறையும் நடக்கும்.

இப்போதே கோட்டபாய வென்றுவிட்டார் என்று கூறுகின்றவர்கள் முதலில் அவர்கள் சொல்லட்டும் தங்களுடைய அமைச்சர்கள் யார் யார் என்பதை. யார் யாருக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் அவர்கள் சொல்லட்டும்.

யாருக்கும் கனவு காண தடை இல்லை அதை எங்களால் தடுக்கவும் முடியாது, ஆனால் இன்னும் 45 நாட்களில் அந்த கனவுகளுக்கு பதில் கிடைக்கும்.

அதனால் தான் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியைப்பற்றி பேசாமல் இருக்கின்றார் அவருக்கு அரசியல் நன்றாக தெரியும்.

அவர் கிராம மட்டத்தில் இருந்து வந்தவர், இப்போது அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முச்சக்கரவண்டி கட்சியினர் தான் அதிகம் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள், அவர்களால் தனித்து ஒரு தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

அதேபோல மஹிந்த ராஜபக்ஸவிற்க்கும் தெரியும் வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெல்ல மாட்டார் என்று.

அதனால் அமைதியாக இருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது…(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!