கிளிநொச்சியில் முதியோர் தின விழா   

முதியோர் தின விழா, கிளிநொச்சி விவேகானந்தா நகர் மேற்கு பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், இன்று கொண்டாடப்பட்டது.

முதியோர் ஓய்வு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டார்.

நிகழ்வில், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிராம மட்ட அரச உத்தியோகத்தர்கள், கிராமத்தில் உள்ள மூத்த பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, மூத்த பிரஜைகளை கௌவரிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!