யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திற்கு அருகில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் தினமான இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில்,
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அலுவலகம் ஜெனிவாவை சமாளிப்பதற்காகவா? வெளியேறு வெளியேறு ஓஎம்பி வெளியேறு, குற்றம் செய்தவன் நீதிபதி ஆகலாம், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எங்கள் பிள்ளைகளின் பெறுமதி 6 ஆயிரம் ரூபாவா? நாகர்கோவில் படுகொலைக்கு நீதி வேண்டும்,செஞ்சோலை படுகொலைக்கு நீதி வேண்டும் போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், சமூக விஞ்ஞான ஆய்வு மைய பிரதிநிதிகள், தமிழ் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள், ரெலோ கட்சியினர், வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கல்வியங்காட்டிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திற்கு சாணகம் வீசியும் தமது எதிர்ப்பினை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!