முல்லைத்தீவில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

முல்லைத்தீவில் சிறுவர்தின நிகழ்வுகள் இன்று சிறப்பாக நடைபெற்றன.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் உமாநிதி புவனராஜா, மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஒட்டுசுட்டான் கற்சிலைமடு சிறுவர் கழக மாணவர்களின் வில்லிசை மற்றும் நாடக நிகழ்வுகளும், இனியவாழ்வு இல்ல மாணவியின் பாடல், ஒட்டுசுட்டான் பாடசாலை மாணவியின் கவிதை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!