முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்   

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், 2017ஆம் ஆண்டு பங்குனி மாதம் எட்டாம் திகதி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், தொடர்ச்சியாக தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 939ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், கையளித்த சிறுவர்கள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து,
அந்த சிறுவர்கள் எங்கே என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பி, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
எமது சிறுவர்கள் படுகொலைக்கு சர்வதேசத்தின் தீர்வு என்ன?,
இறுதியுத்தத்தில் பெற்றோருடன் சரணடைந்த சிறுவர்கள் எங்கே? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், தமிழ் சிறுவர்கள் என்ன பயங்கரவாதிகளா?
எங்கே எங்கே எமது குழந்தைகள் எங்கே? என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!