சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்   

சர்வதேச சிறுவர் தினமான இன்று, பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு எனும் தொனிப்பொருளின் கீழ், பல்வேறு நிகழ்வுகள் வவுனியாவில் இடம்பெற்றன.

வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில், இன்று காலை வவுனியா நகர பாடசாலை உள்ளடக்கியதான துவிச்சக்கர வண்டி பேரணி இடம்பெற்றது.

குறித்த துவிச்சக்கரவண்டிப் பேரணியானது, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி, கந்தசாமி கோவில் வீதியூடாக இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையை அடைந்து, அங்கிருந்து திருச்சபை வித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலயம், சைவபிரகாசா மகளிர் பாடசாலை ஆகியவற்றிற்கு சென்று அப்பாடசாலைகளின் மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, வவுனியா மாவட்டச் செயலகத்தினை அடைந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் தின நிகழ்வுகள், வவுனியா மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றன.

நிகழ்வில், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ந.கமலதாஸ், மாவட்ட கணக்காளர் பாலகுமார், நன்னடத்தை அதிகாரி ஜெயகெனடி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!