கோட்டபாயவை தடுக்கவே வழக்குகள் தொடரப்படுகின்றன – கம்மன்பில

கோட்டபாயவை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்கவே வழக்குகள் தொடரப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கவே வழக்குகள் தொடரப்படுகின்றன எனவும், அவரைக் கண்டு இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் பயத்தில் நடுங்கிவிடுகின்றர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கோட்டாபய தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பல போலியான வழக்குகளை தொடர்ந்தது.
அந்த வழக்குகள் அனைத்துமே நீதிமன்றத்தல் தள்ளுபடி செய்யப்பட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்டது.

இதில் இருந்து என்ன புரிகின்றது என்றால் இந்த அரசு பழிவாங்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதுவும் கோத்தாவிற்கு இருக்கும் பயத்தினால்.

இப்போது புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்திருக்கின்றார்கள்.
அதனை இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களில் உள்ள இருவர் முன்னின்று செயற்படுத்துகின்றார்கள்.
கோட்டாவின் குடியுரிமையில் எந்த சிக்கலும் இல்லை, ஆனால் அதனை வைத்து போலியான பிரச்சாரங்கள் மேகொள்கின்றார்கள்.

அதனை நேற்று அமைச்சர் ராஜிதவின் உரையில் இருந்து நாம் தெரிந்துகொண்டோம்.
இது ஐக்கிய தேசிய கட்சியின் செயல் என்பதை.

சஜித் பிரேமதாசாவுக்கு கோட்டபாய ராஜபக்சவுடன் போட்டியா? முடியாது.

இதன் காரணமாகதான் இந்த சதியை செயற்படுத்துகின்றார்கள்.

கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் சரியான முறையில் கையளித்து தான் பெற்றுக்கொள்ளப்பட்டது.

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமையத்தான் அனைத்தும் பாத்திரங்களும் தயார் செய்யப்பட்டது.

அமைச்சின் செயலர்கள் இல்லாத நேரத்தில் ஒரு ஜனாதிபதிக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கின்றது.

அதேபோல, செயலாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சின் செயலாளராக இருக்க முடியும்.
என்றும் உதயகம்மன்பில இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!