சப்தஸ்வரங்களின் சங்கமம்   நிகழ்வு யாழில்

யாழ்ப்பாணம் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி கல்வி வலய இசையாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வழங்கிய ஏழிசை மாலை சப்தஸ்வரங்களின் சங்கமம் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில், வித்தியாலய அதிபர் யோ. ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஆசியரியர்கள் மாணவர்களின் இசைச் சங்கமத்தின் ஏழிசை மாலை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!