பொதுமக்களால் குளம் புனரமைப்பு

வரட்சியினை தவிர்க்கும் வகையில் வவுனியா பெரியகட்டுக் குளம் பொதுமக்களால் புனரமைக்கப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குளமே பொதுமக்களின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

வரட்சியை அதிகளவில் எதிர்நோக்கி கொண்டிருக்கும் இக் கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தின் வரட்சியை போக்கும் நோக்கோடு கிராம சேவையாளர் இராதகிருஸ்ணனின் வழிகாட்டலின் கீழ் கிராம அமைப்புக்கள், பெண்கள் அமைப்பினர் இணைந்து குளத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கிராம மக்களினால் குளம் நீரினை சேமித்து வைக்கக்கூடிய வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதை நேரில் அவதானிக்க முடிகின்றது.

இக்குளம் பல வருடங்களாக அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினால் புனரமைக்கப்படாமலும் பாவனைக்குதவாமலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!