புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கின்றது.

அமைச்சரவை உப குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், புகையிரத தொழிற்சங்கங்கள் இன்றைய தினமும் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

கோரிக்கை சிலவற்றை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சரவை உப குழுவுடன் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்பட்டது.

இதன்போது, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க நேர்ந்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜனக பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!