சர்வதேச சிறுவர் தினம் இன்று

உலக சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சாசனத்திற்கமைய, சட்டத்தின் மூலம் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவார்கள்.

இதேவேளை, உலக முதியோர் தினமும் இன்றாகும். 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய முதியோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், எமக்கு வழிகாட்டிகளாக உள்ள முதியவர்களின் உரிமைகள் சரிவர பேணப்படுவதற்கும் இன்றைய தினத்தில் நாம் உறுதிபூண்டு கொள்வது சிறப்பானதாகும்.

இவ்வருடம் சிறுவர் தினம் பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு எனும் தொனிப்பொருளின் கீழும், முதியோர் தினம், வயது சமத்துவத்திற்கான பயணம் எனும் தொனிப்பொருளின் கீழும் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!