பாகிஸ்தான் இரண்டாவது போட்டியை வென்றது

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஸாம் 115 ஓட்டங்களையும் பக்ஹர் ஷமான் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் செஹான் ஜயசூரிய 96 ஓட்டங்களையும் தசுன் சானக 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் சின்வாரி 5 விக்கெட்களையும் சதாப் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த 1 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

கராச்சி சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெறவிருந்து ரத்துச் செய்யப்பட்ட முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அது என்பது குறிப்பிடத்தக்கது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!