இரா.சம்பந்தன் – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சியினால்இ ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில்இ வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதைஇ ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாதுஇ நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் எனஇ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் 3.00 மணிக்குஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில்இ இதனை வலியுறுத்தினார்.

அத்துடன்இ தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குஇ ஐக்கிய தேசிய கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை பொறுத்தேஇ ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எடுப்போம் எனவும்இ இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும்இ தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது தீர்மானம் என்னவென்பதை அறிவிக்காதுள்ள நிலையில்இ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பை ஏற்றுஇ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் ஆகியோர்இ இன்று பிற்பகல் 3.00 மணிக்குஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.

இதன் போதுஇ பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்இ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்இ ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசஇ அமைச்சர்களான மலிக் சமரவிக்ரமஇ ரவி கருணாநாயக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வேறு எவரும்இ இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!