சவூதி அரேபிய இளவரசர் ஈரானுக்கு எச்சரிக்கை!

ஈரானின் செயற்பாடுகளுக்கு எதிராக, உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.

இல்லையெனில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியா அரசின் எண்ணெய் ஆலை மீது, கடந்த 14 ஆம் திகதி, வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் மூலம் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

குறித்த தாக்குதலுக்கு, ஈரான் தான் காரணம் என அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஈரான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தான் இத் தாக்குதலை நடத்த வில்லை என, ஈரான் மறுத்து வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், உலக நாடுகளை பாதிக்கும் வகையில், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!