ஊடகவியலாளர் தவசீலன் இன்று விசாரணை செய்யப்பட்டார்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தின் போது, செல்வபுரம் பகுதியில், பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக, இன்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றது.

இது தொடர்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், வவுனியா பிராந்திய காரியாலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக் அமைவாக, இன்று விசாரணைகள் இடம்பெற்றது.

இதன் போது, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமை சேர்ந்த அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி, ஊடகவியலாளர் தவசீலன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜா தலைமையில், இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!